மாறுபட்ட காதல் கதையில் 96.....

PARIS TAMIL  PARIS TAMIL
மாறுபட்ட காதல் கதையில் 96.....

 தற்போது விஜயசேதுபதி பிசியாக பல படங்களில் நடித்து வருவதைப்போன்று த்ரிஷாவும் பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு, சதுரங்கவேட்டை-2வில் அரவிந்த்சாமியுடன் நடிப்பவர், விஜயசேதுபதியுடன் 96 என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் சதுரங்கவேட்டை-2வில் நடிப்பது போன்று எதிரும் புதிருமான வேடத்தில்தான் த்ரிஷா நடிக்கயிருப்ப தாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

 
மேலும், கடந்த பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினத்தன்று இந்த 96 படத்தின் பூஜையை நடத்தியுள்ளனர். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த படம் ஆக்சன் கதையில் உருவாகயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தபோதும், இப்படம் ஒரு மாறு பட்ட காதல் கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் படத்தின் பூஜையை காதலர் தினத்தில் நடத்தியிருப்பதாகவும் அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள்.

மூலக்கதை