ஹாங்காங் டி.20 லீக் யூசுப் பதானுக்கு பிசிசிஐ அனுமதி மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹாங்காங் டி.20 லீக் யூசுப் பதானுக்கு பிசிசிஐ அனுமதி மறுப்பு

மும்பை: பரோடாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் யூசுப் பதான். இந்திய அணிக்காக ஒன்டே மற்றும் டி. 20 போட்டிகளில் விளையாடி உள்ள யூசுப் பதான் மோசமான பார்ம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் யூசுப், ஹாங்காங் டி. 20 லீக் போட்டியில் பங்கேற்று விளையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்காக பிசிசிஐ அனுமதி வழங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது யூசுப்பதானுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க  பிசிசிஐ மறுத்து விட்டது தெரியவந்துள்ளது.

இதனால் அவர் ஹாங்காங் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   ஹாங்காங் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐயிடம் எந்த தொடர்பும் கொள்ளவில்லை.

யூசுப் பதான் விளம்பர தூதராக பணியாற்றலாம் ஆனால் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை