உ.பி. 2ம் கட்ட தேர்தல்: 65.5 சதவீத வாக்குப்பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பி. 2ம் கட்ட தேர்தல்: 65.5 சதவீத வாக்குப்பதிவு

லக்னோ, பிப். 16- உத்தரபிரதேசத்தில் நேற்று இரண்டாம் கட்டமாக 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜ, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை சார்ந்த 62 பெண் வேட்பாளர்கள் உட்பட 721 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்ளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை முதலே ஒவ்வொரு தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

67 தொகுதிகளில் மொத்தம் உள்ள 2. 28 கோடி வாக்காளர்களில் பெண்கள் அதி களவில் வாக்களித்தனர்.  
சில வாக்குச்சாவடிகளில் லேசான மோதல்கள், வாக்குப்பதிவு இயந்திரம் பழுது உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தபோதிலும் அவைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு மாற்று வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட்டது.

நேற்றைய மாலை 5 மணி நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் 65. 5% வாக்குகள் பதிவானது.

இது கடந்த 2012ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவை காட்டிலும் 3% அதிகம் என துணை தேர்தல் அதிகாரி விஜய் தேவ் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை