கோடிக்கணக்கில் செலவழிக்கப்படும் ஆடம்பர திருமணத்துக்கு தடை: மசோதா தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடிக்கணக்கில் செலவழிக்கப்படும் ஆடம்பர திருமணத்துக்கு தடை: மசோதா தாக்கல்

புதுடெல்லி- ஆடம்பர திருமணத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளுக்கு மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடத்துகின்றனர். சமீப காலமாக, நடுத்தர வர்க்கத்தினர் கூட ஆடம்பரமாக திருமணம் நடத்த தொடங்கியுள்ளனர்.

ஆடம்பரமான விழா மற்றும் நகைகள், உணவு, உடை அலங்காரம் என கோடிக்கணக்கான ரூபாய் வரை செலவும் செய்கின்றனர். இவ்வாறு நடக்கும் ஆடம்பர திருமணங்களுக்கு கட்டுபாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.     
இந்நிலையில், காங்கிரஸ் எம். பி.

ரஞ்சித் ரஞ்சன், மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில், ‘‘ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.



ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால், அதிலிருந்து 10 சதவீதத்தை ஏழை பெண்களின் திருமண செலவுக்காக அந்தந்த மாநில அரசுகளிடம் அளிக்க வேண்டும். திருமணத்துக்கு செலவு செய்ய வேண்டிய தொகை, விருந்தினர்கள் அழைப்பு போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

திருமண விழாக்களில் அதிகளவில் உணவுப்பொருட்கள் வீணாவதை தடுக்க வேண்டும். 60 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா அடுத்த மக்களவை கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்து ரஞ்சித் ரஞ்சன் கூறுகையில், ‘‘தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக மிகவு ஆடம்பரமாக திருமணங்களை நடத்துகின்றனர்.

இதனால், திருமணத்துக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய மனநிலைக்கு ஏழைகள் ஆளாகின்றனர்.   இது சமூகத்துக்கு ஏற்புடையது அல்ல.

எனவே, ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

.

மூலக்கதை