மணிப்பூர் தேர்தல் - 215 பேர் மனு தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மணிப்பூர் தேர்தல்  215 பேர் மனு தாக்கல்

இம்பால்- மணிப்பூர் மாநிலத்தின் முதல்கட்ட தேர்தலில் 215 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 4 மற்றும் 8ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 22 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முதல்கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 215 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

நாளை மறுநாள், வேட்புமனுக்களை திரும்பபெற கடைசி நாளாகும். மணிப்பூரில் முதல்வர் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிலையில், இந்த முறை ஆட்சியை பிடிக்க பாஜ முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா, இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதனால் மணிப்பூரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

.

மூலக்கதை