மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து மோடி படத்தை அகற்ற - தேர்தல் கமிஷன் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து மோடி படத்தை அகற்ற  தேர்தல் கமிஷன் உத்தரவு

புதுடெல்லி- உ. பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து பிரதமர் மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றுமாறு அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகத்தின் சார்பில், ‘பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு துவக்கிய இணைய தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்யா  நாயுடு ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல்கள் நடைபெறும் நிலையில், இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் வெங்கய்யா நாயுடு புகைப்படங்களை உடனடியாக  அகற்றுமாறு மத்திய மந்திரிசபை செயலாளர் பி. கே. சின்காவுக்கு தேர்தல் கமிஷன்  நேற்று உத்தரவிட்டது.

அதில், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், இந்த படங்களை  அகற்றாதது ஏன்? மற்ற அமைச்சகங்களின் இணையதளங்களிலும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் படங்கள்  இடம்பெறக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.


.

மூலக்கதை