சசிகலா, இளவரசி ஆகியோருக்கு டெய்லரிங், ஹவுஸ் கீப்பிங் வேலை - சிறை கண்காணிப்பாளர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சசிகலா, இளவரசி ஆகியோருக்கு டெய்லரிங், ஹவுஸ் கீப்பிங் வேலை  சிறை கண்காணிப்பாளர் தகவல்

பெங்களூரு- பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு டெய்லரிங், ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலை தரப்படும் என்று சிறை கண்காணிப்பாளர் ஜெயராமன் தெரிவித்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நேற்று அடைக்கப்பட்டனர்.

சிறையில் சசிகலா, இளவரசிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து சிறை கண்காணிப்பாளர் ஜெயராமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கைதிகளுக்கு புதிய சிறை எண் கொடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு 9234, இளவரசிக்கு 9235, சுதாகரனுக்கு 9236 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிறையில் ஏ, பி, சி என்ற  வகையில் தனிச்சிறைகள்  பிரித்து கட்டப்படவில்லை. அதே சமயம், பெண்களுக்கு தனியாக சிறை  அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சாதாரண சிறையின் கன்விக்டர் அறை எண் 2ல் சசிகலா  மற்றும் இளவரசி அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு சிறைச்சாலை விதிமுறைப்படி வெள்ளை நிற கதர் புடவை வழங்கப்பட்டுள்ளது.

பாய், தலையணை, கம்பளி, போர்வை வழங்கப்பட்டுள்து. கட்டில் கிடையாது.

அவர்கள் தரையில்தான் படுத்தனர். கைதிகளுக்கு வழங்கப்படும் சாப்பாட்டு தட்டு, தண்ணீர் குடிக்க சொம்பு, சாம்பார் கிண்ணம், அவர்களின் பொருட்களை வைத்து கொள்ள சிறிய டிரங்க் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் சிறையில் வழங்கப்படும் ஆடைகளைத்தான் அணிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆடை அணிந்து கொண்டால், விதிமுறைகளையும், ஒழுக்கத்தை காப்பாற்றுவதாக அமையும்.

அதேபோல், சிறை கைதிகளுக்கு வேலை வழங்கப்படுகிறது. பெண் கைதிகளுக்கு டெய்லரிங், ஹவுஸ் கீப்பிங் உள்பட 15 பணிகள் உள்ளது.

அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து செய்தால், அட்டண்டன்ஸ் கிடைக்கும்.

மற்றப்படி சிறை விதிமுறைகள் அனைத்து  கைதிகளுக்கும் பொருந்தும்.

.

மூலக்கதை