கூகுளில் வேலைக் கேட்டு தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி!

PARIS TAMIL  PARIS TAMIL
கூகுளில் வேலைக் கேட்டு தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி!

 இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கூகுள் நிறுவனத்தில் வேலைக் கேட்டு கூகுள் நிறுவன தலைமை அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 
இங்கிலாந்து ஹேரிபோர்ட் பகுதியைச் சேர்ந்த ச்லோ (7) என்ற சிறுமி கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டும் என
 
கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்தக் கடிதத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டும் என்பது எனது விருப்பம். அதைத் தொடர்ந்து ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக தான் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நீச்சல் பயிற்சிக்கு செல்வதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.
 
கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தால், அங்கு பீன்ஸ் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்றும் அங்கு வேலை பார்ப்பது ஒரு விளையாட்டு போன்று இருக்கும் என்றும் தனது அப்பா கூறியதாக அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
 
அந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் உங்கள் முகவரிக்கு என்னை பற்றிய குறிப்புகளை இணையத்தில் அனுப்ப வேண்டும் என்று அப்பா கூறியுள்ளார் என ச்லோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
தான் தற்போது டேப்லட் மடிக்கணினி பயன்படுத்துவதாகவும், அதில் ரோபாட் விளையாட்டு விளையாடுவதாகவும் அவர் எழுதியுள்ளார். விரைவில் கம்யூட்டர் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வேன் எனக் கூறும் ச்லோ, நிச்சயம் ஒரு நாள் தான் கூகுளில் வேலை செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை உடனடியாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தங்களுடைய கடிதம் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை