கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்க மறுத்த நடிகர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்க மறுத்த நடிகர்

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே. வி. ஆனந்த் இயக்கும் படம் ‘கவண்’. விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி. ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ். அகோரம், எஸ். கணேஷ், எஸ். சுரேஷ் தயாரிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் ஆனந்த் கூறியது: ஐ. டி.

கம்பெனியில் நடக்கும் மோசடியை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப் பட்டிருக்கிறது. விஜய் சேதுபதி, மடோனா ஜோடி.

எதையும் வெளிப்படையாக பேசி துணிச்சலாக கருத்துக்களை சொல்லும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க யாரை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்தபோது டி. ராஜேந்தர் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. அவரிடம் சென்று நடிக்க கேட்டபோது நான் நடிப்பதில்லை என்றார்.

வற்புறுத்தி கேட்டபோது என்னை கலாய்ப்பதற்காக நடிக்க அழைக்கிறீர்களா என்று கோபப்பட்டார். அவரை சமாதானப்படுத்தி கதாபாத்திரத்தை முழுமையாக சொன்னபிறகு நம்பிக்கை வந்தது.

பிறகு நடிக்க சம்மதித்தார். படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும்படி இருக்கும்.

ஹிப் ஆப் ஆதி இசை அமைக்கிறார். கதை, திரைக்கதையில் என்னுடன் சுபா, கபிலன் வைரமுத்து பணியாற்றினர்.

அத்துடன்  கபிலன் 3 பாடல்களும் எழுதி உள்ளார்.

.

மூலக்கதை