காதலர் தினத்தில் பூனம் பாண்டே ‘கிக்’ விருந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
காதலர் தினத்தில் பூனம் பாண்டே ‘கிக்’ விருந்து

நாஷா, லவ் இன் பாய்சன் போன்ற இந்தி மற்றும் மாலினி அண்ட் கோ தெலுங்கு படத்தில் நடித்திருப்பவர் பூனம் பாண்டே. ஒரு சில படங்களிலேயே நடித்திருக்கும் பூனம் தன்னைப் பற்றி பரபரப்பான தகவல்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவர்.

நடிக்க வருவதற்கு முன்பே கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அப்படி எந்த காரியத்தையும் அவர் செய்யவில்லை.

ஆனால் ரசிகர்களுக்கு தனது இணைய தள பக்கத்தில் கவர்ச்சி விருந்து படைக்க தவறுவதில்லை. கிறிஸ்துமஸ் உள்ளிட்ட ஒவ்வொரு கொண்டாட்ட நாட்களில் தனது கவர்ச்சி படத்தை இணைய தளத்தில் வெளியிடுவதுடன் அதிரடியான வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்.

நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பாத்ரூமில் அரை நிர்வாண தோற்றத்தில் இருக்கும் படத்தை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் பிறகு கிக்கான வீடியோ ஒன்றையும் பகிர்ந்தார்.



.

மூலக்கதை