சச்சின், ரிச்சர்ட்ஸ்சின் கலவை விராட்கோஹ்லி - கபில்தேவ் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சச்சின், ரிச்சர்ட்ஸ்சின் கலவை விராட்கோஹ்லி  கபில்தேவ் பாராட்டு

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி பதவி ஏற்ற பின், அவரின் தலைமையின் கீழ் 23 டெஸ்ட்டில் விளையாடி உள்ள இந்தியா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் பதவியில் கோஹ்லி 4 இரட்டை சதம் அடித்துள்ளார்.

தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி உள்ள இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது. விராட் கோஹ்லி கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளதாக மாஜி வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், கோஹ்லி, சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவி ரிச்சர்ட்ஸ்சின் கலவை என பாராட்டி உள்ளார். வல்லமை மிக்க பேட்டிங் திறன் கொண்டுள்ள கோஹ்லி, ஆஸி. க்கு எதிராகவும் ரன்களை குவிப்பார்.

இந்திய அணியின் கடைசி வரிசை வீரர்கள் கூட பேட்டிங்கில் உதவி வருகின்றனர். அஸ்வின், ஜடேஜா சமீப காலமாக உச்சகட்ட பார்மில் உள்ளனர் என  தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை