டெஸ்ட் கேப்டனாக யாரை நியமிப்பது? பாக். கிரிக்கெட் வாரியத்தில் திடீர் குழப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெஸ்ட் கேப்டனாக யாரை நியமிப்பது? பாக். கிரிக்கெட் வாரியத்தில் திடீர் குழப்பம்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக் (42). 2001ம் ஆண்டு அணியில் இடம் பிடித்த அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

யூனிஸ்கான் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் கடந்த 2010ம் ஆண்டு அவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் அவர் ஓய்வு முடிவுக்கு சென்றார். ஆனால் பாக்.

கிரிக்கெட் வாரியம் மிஸ்பா தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

சமீபத்தில், பாக் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷாரியார்கான், துபாய் சென்று மிஸ்பாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தி வந்துள்ளார். அப்போது, ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

 
ஆனால் மிஸ்பா ஓய்வு முடிவில் உறுதியாக இருந்தால், தற்போது ஒரு நாள் மற்றும் டி-20 போட்டி கேப்டனாக உள்ள விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவை நியமிக்கலாமா அல்லது துணை கேப்டனாக உள்ள அசார் அலியை நியமனம் செய்யலாமா என தலைவர் ஷாரியார்கான், அணி தேர்வுக்குழு தலைமை நிர்வாகி இன்சமாம், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா ஆகியோர் துபாயில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை