ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் வோக்ஸ் - சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் வோக்ஸ்  சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

சிட்னி: ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் ஆடம் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் 2015ம் ஆண்டு ஆடம் வோக்ஸ் தனது 35வது வயதில் அறிமுகமானார்.

அறிமுக போட்டியிலேயே ஆட்டம் இழக்காமல் 130 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் அதிக வயதில் டெஸ்ட்டில் அறிமுகமாகி, சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.   ஆனால் அதன் பின்னர் நியூசிலாந்து, இலங்கை தொடர்களில் ரன்கள்  குவிக்க தவறியதால் அணியில்இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வோக்ஸ்  டெஸ்ட்டில் 5 சதம் உள்பட 1485 ரன் குவித்துள்ளார்.

சராசரி 61. 87 ஆகும். இலங்கை அணி  தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

3 டி. 20 போட்டிகளில் விளையாட உள்ளது. முன்னதாக  ஆஸி.   பிரதமர் மினிஸ்டர் லெவன் அணியுடன் பயிற்சி போட்டியில்  இலங்கை விளையாடுகிறது.

இதற்கான லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வோக்ஸ் அதுதான் தனது கடைசி போட்டி என தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை