கிளைவ் லாயிட் சாதனை கோஹ்லி தகர்ப்பார் - சுனில்கவாஸ்கர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிளைவ் லாயிட் சாதனை கோஹ்லி தகர்ப்பார்  சுனில்கவாஸ்கர் பேட்டி

மும்பை:  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டி: சொந்த மண்ணில் கோஹ்லி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 19 போட்டிகளில் தோல்வி கண்டதில்லை என்ற சாதனையை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ்  மாஜி.

கேப்டன் கிளைவ் லாயிட் தலைமையில் அந்த அணி தொடர்ச்சியாக 27 போட்டிகளில் தோல்வி கண்டதில்லை என்ற சாதனையை தக்க வைத்துள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அந்த சாதனையை தகர்க்கும் என நினைக்கிறேன்.

ஐதராபாத் டெஸ்ட்டில் இந்திய பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக உமேஷ் பந்து வீச்சு திகிலூட்டும் வகையில் இருந்தது.

ஆஸி. டெஸ்ட் தொடர் சவாலானது.

அதில் இந்தியா சிறப்பாக ஆடும். இவ்வாறு அவர் கூறினார்.



.

மூலக்கதை