என் உடம்பு ‘நச்’சுனு இருக்கு - இலியானா ‘கிக்’ பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
என் உடம்பு ‘நச்’சுனு இருக்கு  இலியானா ‘கிக்’ பேட்டி

ஹீரோயின்களில் பலர் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்ள உடற்பயிற்சி, கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை என பாடாய்படுகின்றனர். இதெல்லாவற்றையும் கையாண்டு தற்போது ‘நச்’ தோற்றத்துக்கு மாறி இருக்கிறார் இலியானா.

தனது தோற்றத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் வகையில் சிங்கிள் பீஸ், டூ பீஸ் நீச்சல் உடைகளில் போஸ், டாப்லெஸ் போஸ் என ‘கிக்’காக படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். உச்சகட்டமாக சமீபத்தில் தனது நிர்வாண படத்தையும் வெளியிட்டு ‘ஷாக்’ தந்தார்.

தற்போது மீண்டும் தனது உடல் தோற்றம் பற்றி ‘கிக்’கான பேட்டி தந்திருக்கிறார். ‘எனது பணி என்னை குடும்பத்திலிருந்து இன்னமும் தூரத்திலேயே வைத்திருக்கிறது.

அவர்களை பிரிந்து எந்நேரமும் படப்பிடிப்பில் இருந்தாலும் அழகான எனது குடும்பத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். பலநேரங்களில் படுக்கையிலிருந்து எழ மனமில்லாமல் மேலும் ஒரு மணி நேரம் தூங்க வேண்டும் என்று எண்ணுவேன்.

எனது உடலுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ‘நச்’சுனு ஆரோக்கியமாக எனது உடல் இருக்கிறது.

சூப்பரான வேலைக்கும் ஒரு நன்றி’ என்றார்.

.

மூலக்கதை