கிருத்திகாவின் இசை ஆல்பத்தை வெளியிட்டார் பாண்டிராஜ்

PARIS TAMIL  PARIS TAMIL
கிருத்திகாவின் இசை ஆல்பத்தை வெளியிட்டார் பாண்டிராஜ்

 நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. இவர் வணக்கம் சென்னை படத்தை இயக்கினார். பல குறும்படங்கள், ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். சென்னையில் செயல்பட்டு வரும் சியர் என்கிற திருநங்கைகள் பாதுகாப்பு அமைப்பிற்காக ஸ்டேண்ட் பை மீ என்ற இசை ஆல்பத்தை இயக்கி உள்ளார் கிருத்திகா. சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்ககைளில் வலியை சொல்லும் இந்த இசை ஆல்பத்தின் பாடல்களை வேல்முருகன் எழுதியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் 12 திருநங்கைள் நடித்தும், ஆடியும் உள்ளனர். லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

 
 
இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்டார். விழாவில் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், மைம்கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கிருத்திகா உதயநிதி "நம் சமூதாயத்தில் பல ஆண்டு காலமாக வெளிச்சத்திற்கு வராத மிக முக்கியமான பிரச்சனை இது. அவர்கள் நம்மிடம் இருந்து கேட்பது அன்பு ஒன்றை மட்டும் தான். 
 
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் புறக்கணிப்பு என்பது மிக பெரிய தண்டனையாக இருக்கும். அத்தகைய தண்டனையை அனுபவித்து வரும் அவர்களுக்கு நாம் ஏன் நம்முடைய அன்பை பகிர்ந்து கொள்ள கூடாது? நாம் அனைவரும் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்க இந்த ஆல்பம் உதவும்" என்று குறிப்பிட்டார்.

மூலக்கதை