பாலாவின் புதிய காதல் கதை......

PARIS TAMIL  PARIS TAMIL
பாலாவின் புதிய காதல் கதை......

 விக்ரம் நடிப்பில் தான் இயக்கிய முதல் படமான சேதுவில் உருக்கமான காதலை சொன்னவர் பாலா. அதன்பிறகும் அவர் படங்களில் காதல் இருந்தபோதும் ஒவ்வொரு படங்களுமே ஒவ்வொரு மாதிரியான களங்களில் அமைந்தன. அந்தவகையில், பாலாவின் ஒரு படத்தில் நடித்தாலே போதும் நம்மை நடிப்பில் பட்டை தீட்டி விடுவார் என்று ஹீரோக்கள் நினைக்கும் அளவுக்கு அவரது கதைகளும், கதாபாத்திரங்களும் அமைந்தன.

 
இந்நிலையில், தற்போது அவர் சாட்டை யுவன்-சூப்பர் சிங்கர் பாடகி பிரகதியை வைத்து ஒரு காதல் கதையை படமாக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அந்தவகையில், இந்த படம் இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதலிக்கிறார்கள், அவர்களின் காதலை சொல்லக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள். அந்த காதலினால் என்னென்ன பிரச்னைகள் எந்த மாதிரியாக உருவாகிறது. அதனால் காதலர்ளின் நிலை என்னவாகிறது என்பதை இன்றைய கால கட்டத்துக்கேற்ப எடுக்கப்போகிறாராம் பாலா.

மூலக்கதை