தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அமெரிக்காவில் அகதிகளுக்கு தடை - அதிபர் டிரம்ப் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அமெரிக்காவில் அகதிகளுக்கு தடை  அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்- அமெரிக்காவில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தடைவிதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

பதவியேற்றவுடன் ஒபாமா காப்பீடு திட்டத்தை உடனடியாக ரத்து செய்த டிரம்ப், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதில் முனைப்பு காட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக ஒரு புதிய உத்தரவை அவர் பிறப்பித்திருக்கிறார்.

இதுகுறித்து அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும்.

இத்தகவல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீடியாக்களில் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர், ஐஎஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.



அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடக்கூடும் என்றும், அகதிகளை அனுமதிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் இந்த அதிரடியில் அவர் இறங்கியுள்ளார்.

தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட சம்பவம் போன்று மீண்டும் அசம்பாவிதம் எதுவும் நிகழக்கூடாது என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவது 30 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடும் கிடையாது.



மேலும், அகதிகளை குடியமர்த்தும் திட்டத்தின் செயல்பாடுகள் 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  
அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சராக ஜேம்ஸ் மட்டிஸ் நேற்று பதவியேற்று கொண்டார்.

இந்த விழாவில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘தீவிரவாதிகள் அமெரிக்காவில் புகுந்து விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பென்டகனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையும், நமது வீரர்களின் தியாகத்தையும் மறந்து விடக்கூடாது.

ராணுவத்தை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்’’ என்றார்.

.

மூலக்கதை