இலங்கை அணியில் மேத்யூஸ் இல்லை!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை அணியில் மேத்யூஸ் இல்லை!

 அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் தலைவரான மேத்யூஸ் விலகியுள்ளார்.

 
இலங்கை அணி அண்மையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி 20 போட்டியில் விளையாடியது, இதில் இலங்கை அணியின் தலைவரான மேத்யூஸ் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.
 
இந்நிலையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 தொடரிலும் மேத்யூஸ் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் காயம் முழுமையாக சரியாகததால் அவர் இத்தொடரில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 தொடருக்கு உபுல் தரங்கா தலைவராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணி போன்ற பெரிய அணிக்கு எதிரான தொடரின் போது ஒரு அனுபவ வீரர் இல்லாதது இலங்கை அணிக்கு ஒரு அடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
மேலும் இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டி 20 போட்டி வரும் 17 ஆம் திகதி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மூலக்கதை