கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டோனி?

PARIS TAMIL  PARIS TAMIL
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டோனி?

 இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனிக்கு இந்திய வீரர்கள் பிரத்யேக 4 ஸ்டார் பரிசு ஒன்றை அளித்தனர்.

 
டோனியின் சாதனைகளான 3 உலகக்கிண்ணங்கள் (2007 (டி20), 2011 (50 ஓவர்), 2013 (சாம்பியன் டிராபி )) மற்றும் இந்திய டெஸ்ட் அணிக்கு நம்பர்-1 அந்தஸ்து பெற்றுத்தந்ததை குறிக்கும் விதமாக இந்த பரிசு இருந்தது.
 
ஹொட்டல் அறையில் ரகசியமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பரிசளித்த இந்திய வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு டோனி நன்றி தெரிவித்துள்ளார்.
 
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார்.
 
இந்நிலையில் இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின் மூலம் இங்கிலாந்தில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது உறுதியாகி உள்ளது.
 

மூலக்கதை