ரஸ்சலுக்கு ஒரு ஆண்டு தடை!

PARIS TAMIL  PARIS TAMIL
ரஸ்சலுக்கு ஒரு ஆண்டு தடை!

 ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறிய வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஆந்த்ரே ரஸ்சலுக்கு 1 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விதிப்படி கிரிக்கெட் வீரர் தான் எங்கு இருக்கிறார் என்று விளையாட்டு அமைப்பு அல்லது தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும்.
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஊக்க மருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளார். எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை தெரிவிக்காமல் அவர் இருந்துள்ளார். 11 மாத காலத்தில் அவர் 3 முறை இந்த விதிமுறையை மீறி இருக்கிறார்.
 
2015-ம் ஆண்டில் ரஸ்சல் 3 தடவை தேசிய ஊக்க மருந்து மையத்துக்கு வர தவறிவிட்டார். இதனால் ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இதை தொடர்ந்து ஆந்த்ரே ரஸ்சலுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹக் பல்க்னெர் தலைமையிலான ஊக்க மருந்து தடுப்பு நடுவர் மன்றம் இதை அறிவித்தது.
 
நேற்றில் இருந்து (31, ஜனவரி 2017) இந்த தடை அமலுக்கு வருகிறது. 2018-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி வரை ரஸ்சல் மீதான தடை இருக்கும். 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலககோப்பையை வெஸ்ட்இண்டீஸ் வெல்ல 28 வயதான அவர் முக்கிய பங்கு வகித்தார். வெஸ்ட்இண்டீஸ் 2 முறை 20 ஓவர் உலககோப்பையை வென்ற அணியில் ரஸ்சல் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை