முக்கிய பிரச்சினையில் சிக்கியுள்ள சுவிஸ் வாழ் மக்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
முக்கிய பிரச்சினையில் சிக்கியுள்ள சுவிஸ் வாழ் மக்கள்!

 சுவிற்சர்லாந்து நாட்டில் குடியுரிமை யாருக்கும் அவ்வளவு எளிதாக வழங்கப்படுவதில்லை.

 
சுவிஸில் ஒருவர் பிறந்திருந்தாலும் அவரின் பெற்றோர் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லையெனில் அவருக்கு குடியுரிமை தானாக வழங்கப்படமாட்டாது.
 
அதே போல ஒருவரின் தாத்தா, பாட்டி அகதிகளாக சுவிஸ்க்கு வந்திருந்தால் அவர்களின் மூன்றாம் தலைமுறை நபர்கள் வழக்கமான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
 
ஆனால் இது மிக நீண்ட செயல்முறை ஆகும். இந்த குடியுரிமை சம்மந்தமாக ஓட்டெடுப்பு அடுத்த மாதம் 12ஆம் திகதி நடைபெறுகிறது.
 
இதில் பெரும்பாலான முக்கிய கட்சியை சேர்ந்த இளைஞர்கள் இங்கு வாழும் இளைஞர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் படி ஓட்டு போட வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
வலதுசாரி SVP கட்சி மட்டும் இந்த நடைமுறையை எதிர்த்து நிற்கிறது. இந்த குடியுரிமையை பெற நினைக்கும் இளைஞர்கள் அவர்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோர் பிறப்பிடம் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
 
மேலும் இவர்கள் 25 வயதுகுட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும். கடந்த 2015ன் கணக்கின் படி மொத்தம் 396,600 வெளிநாட்டவர்கள் சுவிஸ்ஸில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை