ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹக் செய்தவருக்கு பிணை

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹக் செய்தவருக்கு பிணை

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை, 10,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, இன்று உத்தரவிட்டார்.

அந்த இணையத்தளத்தில் தேசிய பாதுகாப்புத் தகவல்கள் எவையும் இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்த சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான பிரேமநாத் டொலவத்த, அதில் மக்களின் முறைப்பாடுகளே காணப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறும் கோரியதையடுத்து, பிணை வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அனுருத்த ஹர்ஷன அபேரசூரிய என்ற சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மூலக்கதை