இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து: திரைப்பட கூட்டமைப்பு தனியாக போராட்டம்

தினமலர்  தினமலர்
இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து: திரைப்பட கூட்டமைப்பு தனியாக போராட்டம்

ஜல்லிக்கட்டு தடை பிரச்சினையில் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வரும் நிலையில் அதற்கு நடிகர், நடிகைகள் தனித்தனியாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

மூலக்கதை