மார்ச்சில் ஆரம்பிக்கும் அஜய்-சூரஜ் படம்

தினமலர்  தினமலர்
மார்ச்சில் ஆரம்பிக்கும் அஜய்சூரஜ் படம்

‛சிவாய்' படத்திற்கு பிறகு நடிகர் அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் ‛பாத்சாகோ'. இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து அஜய், சூரஜ் பஞ்சோலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக செய்தி வந்தது. பின்னர் அந்தப்படம் தள்ளிப்போனதாகவும், அந்தப்படம் கைவிடப்பட்டதாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் இதை இயக்குநர் ரொமோ டிசோசா மறுத்துள்ளார்.

சமீபத்தில் அஜய்யும், சூரஜ் பஞ்சோலியும் ஜெர்மனி சென்று, அங்கு இப்படம் தொடர்பாக பயிற்சி எடுத்துள்ளார்களாம். இந்தப்படத்தில் அஜய்-சூரஜ் இடையே நடன காட்சிகள் இருப்பதால் அதற்காக இருவரும் பயிற்சி எடுத்து வருவதாகவும், அதனால் படப்பிடிப்பு தாமதமாய் வருவதாகவும், உறுதியாக மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என உறுதிப்பட தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை