பிப்ரவரி 9ல் போகன் ரிலீஸ்

தினமலர்  தினமலர்
பிப்ரவரி 9ல் போகன் ரிலீஸ்

ரோமியோ ஜூலியட் வெற்றிக்கு பிறகு ஜெயம்ரவி, ஹன்சிகா, இயக்குனர் லக்ஷ்மண் மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபுதேவா ஸ்டூடியோ சார்பில் பிரபுதேவா தயாரிக்கிறார். அரவிந்த் சாமி, அக்ஷரா கவுடா நடிக்கிறார்கள். இமான் இசை அமைத்துள்ளார், சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சில மாதங்களாவிட்டது. சில வெளியீட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. இப்போது பிப்ரவரி 9ந் தேதி வெளிவருவதாக அறிவித்துள்ளார்கள். ஜனவரி 26ல் வெளியிட முதலில் முடிவு செய்திருந்தார்கள். அந்த தேதியில் சூர்யாவின் சிங்கம் 3யும், ராகவா லாரன்சின் சிவலிங்காவும் மோதுவதால் அதற்கு இடையில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று பிப்ரபரி 9ந் தேதி அறிவித்திருக்கிறார்கள்.

மூலக்கதை