தமிழில் வெளிவருகிறது புலிமுருகன்

தினமலர்  தினமலர்
தமிழில் வெளிவருகிறது புலிமுருகன்

கேரளா சினிமா சரித்திரத்தில் மகத்தான சாதனை படைத்த படம் புலிமுருகன். 35 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட படம், 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. மோகன்லால் தன் முந்தைய சாதனையான திரிஷ்யத்தை முறியடித்தார்.

மோகன்லாலுடன் கமலினி முகர்ஜி, நமீதா, ஜெகபதிபாபு, கிஷோர், லால் நடித்திருந்தனர். கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார், ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். வைஷாக் இயக்கி இருந்தார். மலைக்கிராமம் ஒன்றில் வாழும் சிறுவன் மோகன்லால் தன் தந்தையை தன் கண்முன்னாலேயே புலி கொன்றதை பார்த்ததும் அந்த புலியை அவன் வேட்டையாடிக் கொல்கிறான். பிற்காலத்தில் வளர்ந்து ஆளானதும், புலிகளிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து புலியையும் காப்பாற்றுகிற கதை. பீட்டர் ஹெய்ன் அமைத்திருந்த சண்டை காட்சிகளாலும், மோகன்லாலின் துணிச்சலான நடிப்பாலும் பெரும் வெற்றி பெற்ற படம்.

இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக இருந்தது. கமல், அல்லது விக்ரம் நடிக்கலாம் என்றார்கள். ஆனால் தற்போது படத்தை தமிழில் புலிமுருகன் என்ற பெயரிலிலேயே டப் செய்து வெளியிடுகிறார்கள். தெலுங்கில் மன்னியம்புலி என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். மலையாளத்தில் தயாரித்த தோமிச்சன் முலக்குபாடமே தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியிடுகிறார். தமிழ் வசனத்தை ஆர்.பி.பாலா எழுதியுள்ளார், சினேகன் பாடல்களை எழுதியுள்ளார்.

மூலக்கதை