'போராட்டத்தைத் திருடாதே' - நடிகர் சங்கத்திற்கு கண்டனம்

தினமலர்  தினமலர்
போராட்டத்தைத் திருடாதே  நடிகர் சங்கத்திற்கு கண்டனம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்தப் போராட்டத்தை திசை திருப்ப அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் சதி செய்தாலும் அவற்றிற்கு இடம் கொடுக்காமல் இளைஞர்களும், போராட்டக்காரர்களும் அமைதியான முறையில் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள். எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவும் இல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளே விடாமல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களின் இந்த எழுச்சியைக் கண்டு அரசியல் கட்சிகளே மிரண்டு போயுள்ளன. இந்த நிலையில் திரையுலகத்தினர் தனித் தனியாக போராட்டங்களை நடத்துவதைக் கண்டு போராட்டக் குழுவினரிடையே கோபம் எழுந்துள்ளது.

'போராட்டத்தைத் திருடாதே' என குரல் எழுப்பி சமூக வலைத்தளங்களில் நடிகர் சங்கத்தினரின் நாளைய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் நடிகர் சங்கத்தினர் நாளை நடத்தும் போராட்டம் மீடியாக்கள் மூலம் திசை திரும்ப வாய்ப்புள்ளதாக அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வேண்டுமென்றால் எங்களுடன் மெரினாவில் வந்து போராடுங்கள், அலங்காநல்லூரில் எங்களுடன் வந்து போராடுங்கள். நீங்கள் தனியாக போராட்டம் நடத்தி எங்கள் உணர்வுகளைக் கொச்சைப்டுத்தாதீர்கள் எனக் கூறி வருகிறார்கள்.

மூலக்கதை