தீபிகா நடித்தால் பாலிவுட்டில் நடிக்க வின் டீசல் தயாராம்

தினமலர்  தினமலர்
தீபிகா நடித்தால் பாலிவுட்டில் நடிக்க வின் டீசல் தயாராம்

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வின் டீசல். கடந்தவாரம் இவரது நடிப்பில் ‛டிரிபிள் எக்ஸ் எக்ஸேண்டர் கேஜ்' படம் ரிலீஸானது. இந்தப்படத்தில் முதன்முறையாக பாலிவுட்டின் முன்னணி நடிகையா தீபிகா படுகோனே நடித்திருந்தார். சமீபத்தில் இப்படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வின் டீசல் வந்திருந்தார். அவருடன் நடிகை தீபிகாவும் கவர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்தார். இந்த நிகழ்ச்சியில் வின் டீசலிடம் எப்போது நீங்கள் பாலிவுட் படத்தில் நடிப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த வின், ‛‛என்னுடன் தீபிகா நடிப்பதாக இருந்தால் பாலிவுட்டில் எப்பேற்பட்ட படத்திலும் நடிக்க தயாராக உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

மூலக்கதை