இன்று இரவு மழை பெய்யும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று இரவு மழை பெய்யும்

சென்னை - கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தமானுக்கு  தெற்கே மலேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நேற்று வந்தது.

இன்று காலை நிலவரப்படி அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று மேற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நாளை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கும். 20 முதல் 26ம் தேதி தமிழக கடலோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்யும்.

வட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.


.

மூலக்கதை