கூடுவாஞ்சேரி பகுதிகளில் அனைத்து கட்சி ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூடுவாஞ்சேரி பகுதிகளில் அனைத்து கட்சி ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரி - தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தியும், இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் நேற்று வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தைலாவரம், பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அனைத்து கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையோரத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே, அனைத்து கட்சியினர் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவருமான எம். கே. தண்டபாணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்கேடி. கார்த்திக், நிர்வாகிகள் கே. பி. ஜார்ஜ், வக்கீல் ஜி. கே. லோகநாதன், கோகுலநாதன், முன்னால் வார்டு கவுன்சிலர்கள் குமரவேல், அப்துல்காதர், சதீஷ்குமார், ரவி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் எம்கேபி. சதீஷ்குமார், அதிமுக சார்பில் முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் பிரசாத், வெங்கடபதி, சரவணன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் ஹைதர் அலி உட்பட ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஊரப்பாக்கத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக நிர்வாகி கபில் (எ) கமலக்கண்ணன், திமுக சார்பில் நிர்வாகிகள் மெய்யழகன், இன்பசேகர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள தனியார் கல்லூரி மற்றும் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், கல்லூரி முன்பு ஜிஎஸ்டி சாலையோரம் நின்று பல மணி நேரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

.

மூலக்கதை