ஜல்லிக்கட்டு நடத்திப் பார்…தமிழர்களுக்கு சவால் விடும் பீட்டா செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
ஜல்லிக்கட்டு நடத்திப் பார்…தமிழர்களுக்கு சவால் விடும் பீட்டா செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா

ஜல்லிக்கட்டு நடத்திப் பார்…தமிழர்களுக்கு சவால் விடும் பீட்டா செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியுமா? தமிழர்களால் அது முடியவே முடியாது என சவால் விடுத்துள்ளார் பீட்டா அமைப்பின் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. போராட்ட மாணவர்களுடன், அரசு சார்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இப்போராட்டம் இன்று இந்தியா மட்டுமல்ல உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போராட்டம் வீறு கொண்டு பரவி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, துத்துக்குடி,ஈரோடு என அனைத்துப் பகுதிகளிலும் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்தகாட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும் நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், பீட்டா அமைப்பின் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”பீட்டா உலகம் எங்கும் செயல்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழர்களால் உச்சநீதிமன்றத்தில் போராடி வெற்றிபெற முடியாது.

இது, நான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் வெளிப்படையாக விடுக்கும் சவால்” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை