பாலியல் சீண்டல்களுக்கு தீர்வு சொல்லும் படம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாலியல் சீண்டல்களுக்கு தீர்வு சொல்லும் படம்

பாலியல் தொழிலாளியாக சான்ட்ரா எமி நடிக்கும் படம் சிவப்பு எனக்கு பிடிக்கும். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே. சதிஷ்குமார் தயாரிக்கிறார்.

யுரேகா இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் கூறியது: சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வெவ்வேறு ஊர்களிலிருந்தும், வெவ்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிமித்தமாக பலர் வருகின்றனர்.

இதில் பலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களைப் போன்றவர்களால் மாணவிகள், குடும்ப பெண்களுக்கும்கூட சில சமயங்களில் பாலியல் தொந்தரவுகள், மானபங்கம் போன்ற பிரச்னைகள் எழுகின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வு சொல்லும் படமாக இது உருவாகியிருக்கிறது.

பல்வேறு குணம் கொண்டவர்கள் கூடும் இதுபோன்ற இடங்களில் சிவப்பு விளக்கு பகுதிக்கு அனுமதி தந்தால் மற்ற பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் எதுவும் நடக்காது என்பதுதான் இதன் கரு.

முக்கிய வேடமொன்றிலும் நான் நடிக்கிறேன். மற்றும் பஜார் பாபு, ரோஜா மலர், காமாட்சி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மகேஷ்வரன் ஒளிப்பதிவு. சிவசரவணன், அனிஷ்யுவானி இசை அமைக்கின்றனர்.

இப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் முதலில் என்ன சொல்வார்களோ என்று பயந்தேன். ஆனால் அவர்கள் அனைவரும் எழுந்து நின்று என்னை பாராட்டியதுடன் துளியும் ஆபாசம் இல்லாமல் இப்படியொரு படம் தந்ததற்காக வாழ்த்து கூறினார்கள்.

இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
இவ்வாறு இயக்குனர் கூறினார்.

.

மூலக்கதை