வில்லியாகிறார் ஆண்ட்ரியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
வில்லியாகிறார் ஆண்ட்ரியா

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் துப்பறிவாளன். இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த அக்‌ஷரா ஹாசன் திடீரென்று விலகிக்கொண்டார்.

அந்த வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இது பக்கா வில்லி வேடம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது பற்றி பட தரப்பில் கூறும்போது, ‘ஆண்ட்ரியா வில்லி வேடம் ஏற்கிறார். இது அவருக்கும், ரசிகர்களுக்கும் முற்றிலும் புதிய வேடமாக இருக்கும்.

இயக்குனர் பாக்யராஜும் நெகடிவ் வேடம் ஏற்கிறார். 60 சதவீத படப்பிடிப்பு இதுவரை முடிந்திருக்கிறது.

ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகிறது’ என்றனர்.

ஏற்கனவே ஆண்ட்ரியா விஷாலுடன் பூஜை படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

.

மூலக்கதை