3வது ஒரு நாள் போட்டி பாகிஸ்தான் பேட்டிங்

தமிழ் முரசு  தமிழ் முரசு
3வது ஒரு நாள் போட்டி பாகிஸ்தான் பேட்டிங்

பெர்த்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை 3-0 என இழந்தது. இதன்பின் இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.

பிரிஸ்பேனில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 92 ரன் வித்யாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2வது போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்யாசத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில் 3வது போட்டி பெர்த்தில் இன்று காலை தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஒரு நாள் போட்டிக்கான அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.


.

மூலக்கதை