கிரிக்கெட் விளையாட இந்தியாவை போல் சிறந்த இடம் இல்லை - ஜோஸ் பட்லர் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிரிக்கெட் விளையாட இந்தியாவை போல் சிறந்த இடம் இல்லை  ஜோஸ் பட்லர் கருத்து

கட்டாக்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இன்னும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இதுவரை விளையாடியதில் 4 டெஸ்ட், 1 ஒரு நாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

எனினும் ‘கிரிக்கெட் விளையாட இந்தியாதான் சிறந்த இடம்’ என இங்கிலாந்து ஒரு நாள் அணியின் துணை கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவை போல், கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் சிறப்பான இடம் வேறு எங்கும் இல்லை.

இது மிகவும் சிறப்பான அனுபவம். புனேவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியின்போது, மைதானத்தில் கூடிய ரசிகர்கள் கூட்டத்தை பார்க்க அற்புதமாக இருந்தது.

இது எங்களுக்கு மிகவும் சவாலானதுதான்.

எனினும் ரசிக்க கூடியதும் கூட. நாங்கள் முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்து விட்டோம்.

இதனால் 2வது போட்டி (இன்று மதியம் 1. 30 மணிக்கு தொடங்குகிறது) எங்களுக்கு நாக் அவுட் போட்டி போன்றது. 1-0 என பின்தங்கியுள்ள எங்களிடம், 2-1 என தொடரை கைப்பற்றும் திறன் உள்ளது.

முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியில் எந்த வீரரும் சதம் கடக்காமலேயே 350 ரன்களை குவித்து விட்டோம்.
இதுதான் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் உள்ள வித்யாசம்.

இந்திய அணிக்கு 2 வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து (விராட் கோஹ்லி-கேதர் ஜாதவ்) வெற்றி தேடி கொடுத்தனர். விராட் கோஹ்லி சிறப்பான பார்மில் உள்ளார்.

இந்தியாவில் மேலும் பல சிறப்பான வீரர்களும் உள்ளனர். இதனால் ஒரு வீரரை மட்டும் குறி வைத்து விளையாட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


ஐபிஎல்தான் சிறந்த வீரராக உருவாக்கியது
ஜோஸ் பட்லர் கூறுகையில், ‘2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவம்தான் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கியது.

டி20 போட்டிகளை பற்றி மட்டுமல்லாமல், கிரிக்கெட்டின் அனைத்து வகையான போட்டிகளை பற்றியும், என்னைப்பற்றியும், கிரிக்கெட்டில் உயர்வான நிலைக்கு வர என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும் அறிந்து கொண்டேன்.

இன்னும் பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என நம்புகிறேன்’ என்றார்.

.

மூலக்கதை