கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு பெருகுகிறது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க பீட்டா செய்த அனைத்து முயற்சிகளும் தவறு ஸ்ரீகாந்த் காட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு பெருகுகிறது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க பீட்டா செய்த அனைத்து முயற்சிகளும் தவறு ஸ்ரீகாந்த் காட்டம்

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, தமிழகத்தில் மாணவர், இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்களின் இந்த அமைதியான போராட்டத்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக், முகமது கைப் உள்ளிட்டோரும், தற்போதைய ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் இருப்பவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஸ்ரீகாந்த்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தவறானது என கூறியுள்ள அவர், ஜல்லிக்கட்டு விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமை என்றால், உலகம் முழுவதும் விளையாடப்படும் குத்துசண்டையும் கொடுமையானதுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனுடன் ஜல்லிக்கட்டு மிகவும் ரசிக்கக்கூடிய பாரம்பரிய விளையாட்டு எனவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றின் ‘டாக் ஷோ-வில்’ இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

 

.

மூலக்கதை