நாடுமுழுவதும் 3 ஆயிரம் இடங்களில் குறைந்த விலையில் மருந்து கடைகள் - மத்திய அமைச்சர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடுமுழுவதும் 3 ஆயிரம் இடங்களில் குறைந்த விலையில் மருந்து கடைகள்  மத்திய அமைச்சர் தகவல்

திருப்பதி - திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் இயங்கி வரும் சிம்ஸ் மருத்துவமனையில் 100 கருவிகளுடன் கூடிய டயாலிசஸ் பிரிவு தொடக்க விழா நேற்று நடந்தது. இதை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.

பின்னர் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது:
நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனையால் பயங்கரவாதம் தடுக்கப்பட்டுள்ளது. பணமுதலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொள்ளை, வழிப்பறி, செம்மரக்கடத்தல் போன்றவை குறைந்துள்ளது.

இதேபோல், பணமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைரேகை பதிவு மூலம் வங்கியில் பணம் பெறும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

மேலும் ஜன்தன் திட்டத்தில் நாடு முழுவதும் 26 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பெண்களுக்காக 4 லட்சத்து 17 ஆயிரம் கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் நாடு முழுவதும் விரைவில் குறைந்த விலையிலான மருந்து கடைகள் 3 ஆயிரம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை