இத்தாலியில் அடுத்தடுத்து 3 தடவை நிலநடுக்கம் - பீதியில் மக்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
இத்தாலியில் அடுத்தடுத்து 3 தடவை நிலநடுக்கம்  பீதியில் மக்கள்!

 இத்தாலியில் தலைநகரம் ரோம் மற்றும் பிளாரன்ஸ் நகரம் போன்றவற்றில் அடுத்தடுத்து 3 தடவை பூகம்பம் ஏற்பட்டது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என கருதி மக்கள் பீதியில் உள்ளனர்.

 
இத்தாலியில் ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தில் 300 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த நிலையில் நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. தலைநகரம் ரோம் மற்றும் பிளாரன்ஸ் நகரம் போன்றவற்றில் அடுத்தடுத்து 3 தடவை பூகம்பம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. ரோம் நகரில் மெட்ரோ ரெயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மக்கள் அனைவரும் ரெயில் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள்.
 
நிலநடுக்கம் ஏற்பட்டபோது பள்ளிகளில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. மாணவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. அவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
 
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததாகவோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என கருதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மூலக்கதை