பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு ஜல்லிக்கட்டு குறித்து விரிவாக எடுத்து கூறினார்

PARIS TAMIL  PARIS TAMIL
பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு ஜல்லிக்கட்டு குறித்து விரிவாக எடுத்து கூறினார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக போராட்டம்  தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார்.  அவருக்கு இன்று காலை 10.30 மணிக்கு பிரதமருடன் பேச அனுமதி கொடுக்கப் பட்டிருந்தது.

இதற்காக அவர் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் சென்றுள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமரிடம் விரிவாக எடுத்து கூறினார். பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உரிய சட்ட திருத்தம் கொண்டு வருமாறு கோரிக்கை மனுவும் கொடுத்தார்.

மாணவர்கள், இளைஞர்கள் ஒட்டு மொத்தமாக போராட்டகளத்தில் குதித்துள்ளதையும் ஓ.பன்னீர் செல்வம்சுட்டிக் காட்டி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கும்படி வற்புறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்களும் உடன் இருந்தனர்.
 

மூலக்கதை