உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி - வாகன அனுமதி பத்திரத்தில் மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி  வாகன அனுமதி பத்திரத்தில் மாற்றம்!

 வாகன விபத்துக்கள் காரணமாக மூளைச்சாவு அல்லது இரத்த ஓட்ட கட்டமைப்பு செயலிழப்பதன் காரணமாக உயிரிழக்கும் சாரதிகளின் உடல் உறுப்புகளை, தேவையான நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக தானம் செய்ய கூடிய வகையில் சாரதிகள் தங்கள் விருபத்தை வெளியிடுவதற்காக சாரதி அனுமதி பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் அதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு இணக்கம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
அதற்கமைய,  உடல் உறுப்புக்களை தானம் செய்ய விரும்பும் சாரதிகள் தமது விருப்பத்தை தெரிவித்து கடிதம் ஒன்றை வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
 
அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் சாரதிகளும் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வகையில் மாற்றங்களை செய்யப்படவுள்ளது.
 
 

மூலக்கதை