கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?

PARIS TAMIL  PARIS TAMIL
கடுமையான குளிர்  தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?

அதியுச்சக் குளிர் பிரான்சில் நிலவும் நிலையில், வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அதியுச்சக் குளிர் தங்களது உடல்நலத்திற்கு உடனடி ஆபத்தானது என்று நிரூபித்தாhல்,  தங்களது வேலைகளை நிறுத்துவதை தொழிலாளர் சட்டம் L. 4131-1  அனுமதிக்கின்றது. மிகவும் கடுமையான குளிர்கால நிலையில், அல்லது வேறுவிதமான ஆபத்தான காலநிலையில், வெளியில் நின்று வேலை செய்யும் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமையாகும்.
 
 
சட்டம் என்ன சொல்கின்றது?
 
தொளிலாளர் சட்டமான code du travail - article L 4121-1 மற்றும் அதன் தொடர்ச்சி, தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய கடமையை முதலாளிக்கு வலியுறுத்துகின்றது. சூழ்நிலை மாற்றம், முக்கியமாகக் காலநிலை மாற்றத்தின் போது, ஒவ்வொரு பணி அலகுகளிலும், பணியாளர்களிற்கு உகந்த வெப்பநிலையை நிறுவனம் பேணவேண்டும் என, இந்தச் சட்டம் வலியுறுத்துகின்றது. L 4121-1 சட்டமானது பெரும் குளிரின்போது அதற்கான நடவடிக்கையை எடுக்க நிறுவனத்தை வலியுறுத்துகின்றது.
 
 
எடுக்க வேண்டிய நடவடிக்கை
 
கடும் குளிரின்போது, வெளியில் வேலை செய்யும் தொலிளார்கள், அடிக்கடி இளைப்பாற, வெப்பபமூட்டப்பட்ட ஒரு பகுதி உருவாக்கப்படல் வேண்டும். அவர்களிற்கு அங்கு சூடான பானங்கள் கிடைக்கும்படி செய்தல் வேண்டும். ஆடைகளை உலர்த்த அல்லது வெப்பமூட்ட வேண்டிய வசதிகளோட மாற்றுடைகளை வைப்பதற்கான இடத்தினையும் வழங்குதல் வேண்டும். 
 
-5°C வெப்பநிலையில் உடனடியாக மேற்கண்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் செய்ய வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகின்றது.
 

மூலக்கதை