விக்கிலீக்ஸ் வழக்கில் திருநங்கை விடுதலை

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: விக்கி லீக்ஸ் இணையதளம் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ராணுவ ரகசியங்களை திருடியதாக செல்சியா மேன்னிங் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆணாக பிறந்த இவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர். இவருக்கு 2013ல்35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மே மாதம் 17ம் தேதி செல்சியா மேன்னிங்கை விடுதலை செய்ய, அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதுஉளவுத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை