இத்தாலியில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

தினகரன்  தினகரன்

ரோம்:  இத்தாலியின் மையப்பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு 100 கிமீ பரப்பளவிற்கு உணரப்பட்டது. தலைநகர் ரோம் மற்றும் அதனை சுற்றியுள்ள அப்ரூஸ், லாசியோ மற்றும் மார்க் போன்ற இடங்களில் நிலஅதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர்.  இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகியுள்ளது. முதலில் காலை 10.25 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பின்னர் அடுத்த 50 நிமிடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இவை ரிக்டர் அளவுகோலில் 5.3, 5.7 மற்றும் 5.5 ஆக பதிவானது.சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்ள வீரர்கள் சென்றுள்ளனர். மேலும், கடுமையான  பனிமூட்டம் நிலவி வருவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலத்தடி ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 300 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை