டிரம்ப் நாளை பதவியேற்பு : வாஷிங்டனில் விழாக்கோலம்

தினமலர்  தினமலர்
டிரம்ப் நாளை பதவியேற்பு : வாஷிங்டனில் விழாக்கோலம்

வாஷிங்டன்: அமெரிக்காவின், 45வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், 70, நாளை பதவியேற்க உள்ளார். இதற்காக, வாஷிங்டனில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக உள்ள, ஒபாமாவின் பதவிக்காலம், இன்றுடன் முடிவுக்கு வருகிறது. குடியரசு கட்சியைச் சேர்ந்த, பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான, டொனால்டு டிரம்ப், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். நாட்டின், 45வது அதிபராக, அவர் நாளை பதவியேற்கிறார்.பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, அவரது ஆதரவாளர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், வாஷிங்டனுக்கு வரத் துவங்கியுள்ளனர்.அதிகாரபூர்வமாக, பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் இன்று மாலை துவங்குகிறது. இருப்பினும், ஏற்கனவே அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும், பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பதவியேற்பு விழாவையொட்டி, வாஷிங்டன் உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து, உயரதிகாரிகளுடன், அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்பதை வரவேற்கும் வகையில், ஹாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை