நவம்பர் 13 தாக்குதல்!! - அடையாளம் காணப்பட்ட தற்கொலை பயங்கரவாதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
நவம்பர் 13 தாக்குதல்!!  அடையாளம் காணப்பட்ட தற்கொலை பயங்கரவாதி!!

நவம்பர் 13 தாக்குதலில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன் அடையாளம் காணப்பட்டுள்ளான். பரிசின் Stade de France மைதானத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் ஈராக்கை சேர்ந்த 20 வயது இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற அன்று Stade de France மைதானத்தில் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து உதைப்பந்தாட்ட போட்டிகளை ரசிகர்களுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதன் போதே மைதானத்துக்கு வெளியே தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாதிகளை அடையாளம் கண்ட மைதான வாசலில் நின்ற காவலாளி பயங்கரவாதியினை தடுத்துள்ளார். 
 
அதன் பின்னர் வெளிய ஓடிச்சென்றுள்ள பயங்கரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளான். அதில் குறித்த Ammar Mohamad Ramadan Mansour al Sabaawi எனும் பெயருடைய பயங்கரவாதி, 20 வயதுடைய ஈராக் நாட்டைச் சேர்ந்தவன் என்றும், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளிடம், Mosul நகரில் பயங்கரவாத பயிற்சிகளை மேற்கொண்டுள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தற்கொலை தாக்குதலுக்கான பயிற்களை மேற்கொண்டுள்ளான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Stade de France மைதானத்தில் தாக்குதல் இடம்பெற்ற அன்று பிரான்ஸ் ஜெர்மனி அணிகளுக்கிடையே உடைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றிருந்தமையும், அதன் போது மூன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை