விஸ்பரூபம் எடுக்கும் பனிப்படலம்! - பரிசுக்குள் இன்று -9 வரை பதிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
விஸ்பரூபம் எடுக்கும் பனிப்படலம்!  பரிசுக்குள் இன்று 9 வரை பதிவு!!

இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் பனிப்பொழிவும், கடும் குளிரும் நேற்று செவ்வாய்க்கிழமையை விடவும் இன்று அதிகரித்துள்ளது. குறிப்பாக பரிசுக்குள் -9 செல்சியஸ் வரை குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் -3 செல்சியத்தில் இருந்து -9 செல்சியஸ் வரை குளிர் நிலவுவதாகவும், சில மாவட்டங்களில் -9 முதல் -12 செல்சியஸ் வரை குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பரிசுக்குள் இன்று அதிகளவான குளிர் உறைவதாகவும்  பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பரிசுக்குள் -4 செல்சியசில் இருந்து -9 (இல்-து-பிரான்ஸ் மாவட்டங்களில்) வரை குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை -2 செல்சியசில் இருந்து இன்று அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசுக்குள் நிலவும் இந்த கடும் குளிரானது இந்த வாரக் கடைசி வரை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், இன்று புதன்கிழமை ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, பிரதமர் பெர்னாட் கசநவ், மேலும் சுற்றுச்சூழல் அமைச்சர், வீடு அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு 'குளிர்கால நடவடிக்கைகள்' குறித்த சந்திப்பு ஒன்றை இன்று காலை 8.45 மணிக்கு நிகழ்த்தியுள்ளார்கள். பெர்னாட் கசநவ் அவசர நிலமையின் போது தேவையான தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுக்க சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை