தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யாழில் ஒன்று திரண்ட இளைஞர்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யாழில் ஒன்று திரண்ட இளைஞர்கள்

 தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மரபினைக் காக்க போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் கவனயீர்ப்பு என்ற தொனிப்பொருளில் இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
 
“ தமிழக நண்பர்களு விடாமல் போராடுங்கள் ”, “ எரியும் தமிழகத்திற்கு ஈழத் தமிழர்களின் தீ ”, “ தடை அதை உடை தமிழர்களின் மரபுரிமைக்காக குரல் கொடுப்புாம்” , “கொம்புக்கு கிட்ட வைத்துக்கொள்ளாத வம்பு ”, “ அடங்க மறு அத்து மீறு ” , “ ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் ”, “ நாங்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறோம் நமக்குள் எல்லைகள் கிடையாது”, அடையாளம் எங்கள் முகம் தமிழ் எங்கள் உயிர் ” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மூலக்கதை