ஆறு மணிவரைதான் கெடு.. அடுத்து என்ன செய்ய வேண்டும் ஆட்சியாளர்கள்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆறு மணிவரைதான் கெடு.. அடுத்து என்ன செய்ய வேண்டும் ஆட்சியாளர்கள்?

சென்னை: மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பிக்கள் 50 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த கெடு மூலம் மாநில அரசுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து அலங்காநல்லூர் வந்துள்ள போராட்டக்காரர்கள் தங்கள் வேலைகள், குடும்பத்தை விட்டுவிட்டு எத்தனை நாள்தான் அங்கேயே தங்கியிருக்க முடியும் என்ற சூழல் வந்துள்ள நிலையில் இந்த கெடு விதிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

கத்தி பார்த்தும், கூச்சலிட்டு பார்த்தும், சீறிப்பார்த்தும் காதில் விழாததை போலவே உட்கார்ந்திருக்கும் மாநில அரசுக்கு எதிராக அம்மாநில மக்கள் தங்கள் உரிமைக்காக கெடு விதித்துவிட்டனர்.

இப்போது பந்து தமிழக அரசின் கோர்ட்டுக்குள் விழுந்துள்ளது.

இப்போது மாநில அரசு இவற்றில் எதையாவது ஒன்றை செய்து போராட்டத்தின் தீவிரத்தை தற்காலிகமாகமாவது தணிக்கலாம்.

மூலக்கதை