ஜல்லிக்கட்டு தடைக்கும் பருவ மழை பொய்த்ததுக்கும் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ஜல்லிக்கட்டு தடைக்கும் பருவ மழை பொய்த்ததுக்கும் ...

கடந்த வருடம் பெய்ய வேண்டிய பருவ மழை சரியாக பெய்யவில்லை. விவசாயம் கருகிப்போனது, நிலங்கள் வரண்டுபோய்விட்டது.

வாடிய பயிரை கண்ட விவசாயிகளும் மாண்டு போயினர். இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் தொடர்பு இருக்கிறது.


    ஒரு இடத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் குறைந்தது 200 காளைகள் விடப்படும்.

ஒவ்வொரு காளைகளையும் அங்கு பிடித்து கட்டுவதற்காக நீண்ட நிலப்பரப்பில் மரங்கள் வளர்க்கப்படும். தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

அப்படியென்றால் எத்தனை காளைகள் அங்கு பங்குபெறும் எத்தனை ஆயிரம் மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கும் என்பதை கணக்கிட்டுப்பாருங்கள்.   ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டுக்கு மாடுகள் கட்ட வளர்க்கப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு அவை ரியல் எஸ்டேட் நிலமாக மாறிவிட்டன. மரம் வளர்த்தால் மழை பெறுவோம் என கூறும் அரசு, ஜல்லிக்கட்டை தடைசெய்து மறைமுகமாக மரங்களையும் அழித்து மழையையும் பொய்க்க வைத்துள்ளது.   ஜல்லிக்கட்டை தடை செய்ததால் நாட்டு மாடுகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர் விவசாயிகள்.

இதனால் தான் தஞ்சாவூர் பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கையும் குறைந்தது நீர் வளமும் குறைந்தது கடைசியில் விவசாயில் உயிரை மய்த்துக்கொண்டது தான் மிஞ்சியது.   ஆனால் தஞ்சாவூரின் அருகில் உள்ள திருச்சியில் விவசாயிகள் தற்கொலை குறைவு. காரணம் அங்கு நாட்டு மாடுகளின் பயன்பாடு குறைவு ஜெர்சி இன மாடுகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் அவர்கள்.   வளமான நிலம் இருந்தால் தான் வளமான விளைச்சல் பெறமுடியும்.

வளமான விளைச்சல் பெருக, வளமான உணவு இடப்படவேண்டும். நிலங்களுக்கான வளமான உணவு கால்நடைகளின் கழிவுகளே.

கால்நடையான நாட்டு மாடுகள் வளர்ப்பு என்பது வளமான நிலத்தை பாதுகாத்து பராமரிக்கவே.

.

மூலக்கதை